'கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள்' - மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை


கல்வி மூலமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள் - மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை
x

ஒருவர் வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்ககூடாது என கூறினார்.

சென்னை,

சென்னை சாலி கிராமத்தில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது,

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். மாணவர்களை பள்ளிக்கு வரவழைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது தெரியும். அனைவருக்கும் சரியான சமமான கல்வி வழங்க அகரம் அறக்கட்டகளை முயற்சி எடுத்து வருகிறது. இது போன்ற கல்வி உதவிதொகை பெறும் நிகழ்வால் தான் வாழ்க்கை முழுமையடைகிறது.

கல்வி மூலவமாக வாழ்க்கையை படியுங்கள், வாழ்க்கை மூலமாக கல்வியை படியுங்கள் என மாணவர்களுக்கு நடிகர் சூர்யா அறிவுரை வழங்கினார்.

மேலும், காலையில் சீக்கிரம் எழ வேண்டும். அதை நான் இப்போது தான் கடைபிடைக்கிறேன் என்றார். பிறரை பழி சொல்லுதல், பிறரை பற்றி எதிர்மறையாக பேசுவதை குறைக்க வேண்டும். சாதி மதத்தை கடந்து வாழ்க்கையை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவர் வீண் சொல், பழி சொல் பேசிவிட்டார்கள் என்பதற்காக முழு நாளையும் வீணடிக்ககூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story