ரியல் எஸ்டேட் தரகர் ரெயிலில் அடிபட்டு பலி


ரியல் எஸ்டேட் தரகர் ரெயிலில் அடிபட்டு பலி
x

ஆம்பூரில் ரியல் எஸ்டேட் தரகர் ரெயிலில் அடிபட்டு பலியானார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நடராஜபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் ராஜன் (வயது 45), ஆம்பூர் பகுதியில் ரியல் எஸ்டேட் தரகராக இருந்தார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி சரசு என்ற மனைவி உள்ளார். குழந்தைகள் எதுவும் இல்லை.

இந்த நிலையில் ராஜன் ஆம்பூர் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார் அப்போது ஜோலார்பேட்டை பகுதியில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தார். மதல் கட்ட விசாரணைக்கு பிறகு உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடக்கிறது.


Related Tags :
Next Story