" விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை.." ஆலோசனை கூட்டத்தில் ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர் முக்கிய உத்தரவு


 விவசாயிகளின் பொருட்களுக்கு உரிய விலை.. ஆலோசனை கூட்டத்தில்  ஆட்சியர்களுக்கு முதல்-அமைச்சர்  முக்கிய உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2023 1:23 PM IST (Updated: 26 Aug 2023 1:42 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

நாகப்பட்டினம்,

நான்கு நாள் பயணமாக திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று திருக்குவளைக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், கள ஆய்வுத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, அதிகாரிகள் மத்தியில் முதல் அமைச்சர் பேசியதாவது;

அரசின் திட்டங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும்.

* வேளாண் உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

* வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன், நிலுவையில் உள்ள சாலை பணிகளை முடித்து பொதுமக்களின் இன்னலை போக்க வேண்டும்.

* கல்வியில் மயிலாடுதுறை மாவட்டம் கடைசி இடத்தில் உள்ளது இதனை மாற்றி அமைக்க வேண்டும்.

* மகளிர் சுய உதவிகளுக்கான கடன்கள் வழங்குவதில் ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

* அதிகாரிகளும் - அமைச்சர்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதும், மாவட்ட நிர்வாகமும், தலைமைச்செயலகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் தான் நல்லாட்சியின் இலக்கணம்.

* தென்னை மரங்களின் பரப்பை அதிகரிக்க, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.

தொடர்ந்து மக்களுடன் இருந்து அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்த செயல்படுவீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


Next Story