சேலம் கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு


சேலம் கலெக்டர், மாநகராட்சி அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 18 Aug 2022 8:00 PM GMT (Updated: 18 Aug 2022 8:00 PM GMT)

சேலம் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

சேலம்

சேலம் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி மற்றும் அரசு அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றன.

உறுதி மொழி

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 19-ந் தேதி கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) கிருஷ்ணஜெயந்தி அரசு விடுமுறை நாள் என்பதால் ஒரு நாளைக்கு முன்னதாக நேற்று நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம தலைமை தாங்கி நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசித்தார். அதை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகன்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகராட்சி

இதேபோன்று சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் தலைமை தாங்கி நல்லிணக்க நாள் உறுதி மொழி வாசித்தனர். அதை மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் பின் தொடர்ந்து வாசித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதில் துணை மேயர் சாரதாதேவி, பொறியாளர் ரவி, செயற்பொறியாளர்கள் பழனிசாமி, லலிதா, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு, சாந்தி, சுப்பையா, கதிரேசன் உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாகாளீஸ்வரன், செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போலீசார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


Next Story