கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு


கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு
x

ராசிபுரம் அருகே கிணற்றில் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பேரூராட்சி பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. இவர் 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் பசு மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக விவசாயி ராஜா சென்று பார்த்த போது பசுமாடு ஒன்று காணவில்லை. அவர் அந்த பசு மாட்டை தேடியபோது அவருக்கு சொந்தமான 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜா ராசிபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி கிரேன் உதவியுடன் பசு மாட்டை உயிருடன் மீட்டனர்.


Next Story