ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு


ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகள் மீட்பு
x

பாலைவனநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.16 லட்சம் மதிப்பிலான சொத்துகளை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.

தஞ்சாவூர்

பாபநாசம்;

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா திருப்பாலைத்துறையில் பாலைவனநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வெள்ளை பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் சீதாலட்சுமி, அழகர் ஆகிய இருவரும் ஆக்கிரமிப்பு செய்து அனுபவித்து வந்தனர்.இந்தநிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் கவிதா முன்னிலையில், வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் ரூ.16 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புள்ள இடத்தை மீட்டு சீல் வைத்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.மீட்பு பணியில் கோவில் செயல் அலுவலர் அசோக்குமார், தனி தாசில்தார் சங்கர், ஆய்வாளர் லட்சுமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story