போலி இணையதள இணைப்பு மூலம் இழந்த பணம் மீட்பு


போலி இணையதள இணைப்பு மூலம் இழந்த பணம் மீட்பு
x

போலி இணையதள இணைப்பு மூலம் இழந்த பணம் மீட்கப்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகில் உள்ள குடிமிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்தி.

இவரது செல்போனில் உள்ள டெலிகிராம் செயலியின் மூலம் தெரியாத நபரிடம் இருந்து குறிப்பிட்ட இணையதளத்தில் பணத்தை செலுத்தினால் பின்னர் பணம் இருமடங்காக கிடைக்கும் என்று அவருக்கு இணையதள இணைப்பு ஒன்று வந்தது.

அந்த இணைப்பின் மூலம் அவர் ரூ.14 ஆயிரம் பணத்தை செலுத்தி உள்ளார்.

பின்னர் அவர் போலியான இணையதளத்தில் பணத்தை இழந்ததை அறிந்த உடன் இழந்த பணத்தை மீட்டு கொடுக்குமாறு சைபர் கிரைம் பண மோசடி புகார் எண் 1930-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு போலி இணையதள இணைப்பின் மூலம் கார்த்தி இழந்த பணத்தை மீட்டனர்.

பின்னர் கார்த்தியிடம் அந்த பணத்தை போலீசார் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story