திருவானைக்காவல் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 லட்சம் நிலம் மீட்பு


திருவானைக்காவல் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 லட்சம் நிலம் மீட்பு
x

திருவானைக்காவல் கோவிலுக்கு சொந்தமான ரூ.7 லட்சம் நிலம் மீட்கப்பட்டது.

திருச்சி

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான இடம் வடக்கு ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள காடுவெட்டி நந்தவனத்தில் உள்ளது. இங்கு லட்சுமி என்பவர் 464 சதுர அடி இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து பயன்படுத்தி வந்தார். இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், லட்சுமி கோவில் இடத்தை பயன்படுத்தியதற்கான இழப்பீடு தொகையை கோவில் அலுவலகத்தில் செலுத்திவிட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் லட்சுமி தன்னை வாடகைதாரராக நியமிக்க கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இழப்பீடு தொகையை செலுத்திவிட்டு, கோவில் இடத்திலிருந்து வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது. லட்சுமி கோவில் இடத்தில் இருந்து உரிய காலத்தில் வெளியேறாததால் இந்து சமய அறநிலைத்துறையினர் வருவாய்த்துறையினர் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தினை கையகப்படுத்தினர். அந்த இடத்தின் மதிப்பு ரூ.7 லட்சம் என கோவில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.


Next Story