திருட்டு போன கம்பிகள் மீட்பு; 3 பேர் மீது வழக்கு
திருட்டு போன கம்பிகள் மீட்பு; 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை
காரையூர் அருகே மேலத்தானியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 1,500 கிலோ கம்பிகள் திருட்டு போனது. இதுகுறித்து புகாரின் பேரில், காரையூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் 1,500 கிலோ கம்பிகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக விராலிமலை அருகே உள்ள தென்கைத்தினிப்பட்டியை சேர்ந்த குணசேகர் (வயது 22), அதே ஊரை சேர்ந்த முருகேசன் (30), உசிலம்பட்டியை சேர்ந்த அருண்குமார் (22) ஆகிய 3 பேர் மீதும் காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story