ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு


ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
x

அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது.

அரியலூர்

28 பணியிடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 28 பணி இடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. அந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்த ஆண்கள், பெண்களுக்கு உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் அரியலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்தோணி ஆரி, துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் ஊர்க்காவல் படை வட்டார தளபதி ஜீவானந்தம் ஆகியோரின் மேற்பார்வையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு முகாமில் உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது.

123 பேர் கலந்து கொண்டனர்

ஆண்களுக்கு உயரம் மற்றும் மார்பளவும், பெண்களுக்கு உயரமும் அளவிடப்பட்டது. ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊர்க்காவல் படை அதிகாரிகள் உடற்தகுதி தேர்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 114 ஆண்களுக்கும், 9 பெண்களுக்கும் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியும் நடைபெற்றது. மீதமுள்ளவர்களுக்கு இன்று (சனிக்கிழமை) உடற்தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. தேர்வாகும் ஊர்க்காவல் படை வீரர்களுக்கு 45 நாட்கள் கவாத்து பயிற்சி நடைபெறும். 3 ஆண்டுகள் கட்டாயம் தொடர்ந்து பணிக்கு வர வேண்டும்.


Next Story