தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி


தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி
x
தினத்தந்தி 7 April 2023 7:00 PM GMT (Updated: 7 April 2023 7:00 PM GMT)

ஆண்டிப்பட்டியில் தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி நடந்தது.

தேனி

தமிழகத்தில் தி.மு.க.வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடை பெற்றது. இதற்கு மகாராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். தொகுதி பார்வையாளரான தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் முரளி முன்னிலை வகித்தார். முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஒன்றிய, நகர் பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பங்களை கிளை நிர்வாகிகள், வார்டு செயலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story