உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி
பனையபுரத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி ஒன்றியம் பனையபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சமூகநலம், மகளிர் மேம்பாட்டுத்துறை சார்பில் குழந்தைகள் வளர்ச்சி, உணவு, கல்வி குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி கையேடுகளை வழங்கினார். ஒன்றியக்குழு தலைவர் சங்கீதஅரசி, வட்டார மருத்துவ அலுவலர் வினோத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாராயணன், குலோத்துங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் மனோசித்ரா வரவேற்றார். டாக்டர் ராமகிருஷ்ணன், குழந்தைகளுக்கான வளர்ச்சி, உணவு, கல்வி, சுகாதாரம் வழங்குவது குறித்து பயிற்சியளித்தார்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, வேம்பி ரவி, ஜெயபாலமுருகன், கண்காணிப்புக்குழு எத்திராசன், சிற்றூராட்சிகள் சங்க தலைவர் சங்கர், செயலாளர் அரசகுமாரி அரிகிருஷ்ணன், பொருளாளர் கனிமொழி சிலம்பரசன் உள்பட அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் மேற்பார்வையாளர் குணவதி நன்றி கூறினார்.