1,800 டன் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு


1,800 டன் நெல்லை கொள்முதல் செய்ய மறுப்பு
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி 1,800 டன் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார் செய்தனர்.

கோயம்புத்தூர்

ஈரப்பதம் அதிகமாக இருப்பதாக கூறி 1,800 டன் நெல்லை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாக அதிகாரிகள் மீது விவசாயிகள் புகார் செய்தனர்.

நெல்லின் ஈரப்பதம்

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் 6,500 ஏக்கர் பரப்ப ளவில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. தற்போது 3,500 ஏக்கர் பரப் பளவில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது.

அரசு சார்பில் சன்ன ரக நெல் கிலோ 21 ரூபாய் 60 பைசாவுக்கும், புதுரகம் 21 ரூபாய் 15 பைசாவுக்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

நெல்லை கொள்முதல் செய்ய 16 சதவீதம் வரை ஈரப்பதம் இருக் கலாம் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் விவ சாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் மையத் துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அந்த நெல்லில் 17 முதல் 18 சதவீதம் வரை ஈரப்பதம் இருப்பதாக கூறி அதிகாரிகள் கொள் முதல் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு நஷ்டம்

இந்த நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பட்டீசுவரன் தலைமையில் விவசாயிகள் கையில் நெல் பாக்கெட்டுகளுடன் வந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதன்பிறகு விவசாயிகள் கூறியதாவது:-

ஆனைமலை பகுதியில் அறுவடை செய்த 3 ஆயிரம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. 1800 டன் நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாக கூறி கொள்முதல் செய்ய அதிகாரி கள் மறுக்கிறார்கள்.

இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படு கிறது. எனவே விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.


Next Story