குடல் புற்றுநோய் குறித்து நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜப்பான் மருத்துவ குழுவினர் ஆலோசனை
குடல் புற்றுநோய் குறித்து நெகமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஜப்பான் மருத்துவ குழுவினர் ஆலோசனை
கோயம்புத்தூர்
நெகமம்
குடல் மற்றும் ஆசனவாய் புற்றுநோய் கண்டுபிடிப்பு மற்றும் விழிப்புணர்வு திட்டம் தொடர்பாக நடைமுறைப்படுத்த உள்ள சாத்தியகூறுகள் பற்றி ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பான் நிறுவன மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் நெகமம் அரசு ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஆய்வு நடத்தினர். மேலும் குடல் புற்றுநோய் குறித்து விரிவான ஆலோசனை நடந்தது. முன்னதாக அங்கு வந்த ஜப்பான் குழுவினரை வட்டார மருத்துவ அலுவலர் அழகு ராஜலட்சுமி வரவேற்றார். இதில், மாவட்ட திட்ட அலுவலர் சிந்து மற்றும் அறுவை சிகிச்சை நிபுனர் பிரீத்தி, வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆய்வின் போது ஜப்பானிய வல்லுனர் குழுவினர் மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர்.
Related Tags :
Next Story