தேர்தல் நடத்துவது குறித்து மாநில ஆணையாளர் ஆலோசனை

தேர்தல் நடத்துவது குறித்து மாநில ஆணையாளர் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Aug 2023 12:15 AM IST (Updated: 5 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையாளர் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை

சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மே மாதம் 31-ந் தேதி வரை காலியாக உள்ள பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையாளர் பழனிகுமார் நேற்று சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ள இடங்கள், வாக்குச்சாவடி மையங்களின் விவரங்கள், ஊரக உள்ளாட்சி நேரடி தேர்தல்களுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் இருப்பு விவரம், நகர்ப்புற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் இருப்பு விவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வீரராகவன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story