தொடர் விடுமுறை: இன்று 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!


தொடர் விடுமுறை: இன்று 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு!
x

மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை,

வருகின்ற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் பஸ்கள், ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சிறப்பு பஸ்கள், சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், தொடர் விடுமுறையை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் மெட்ரோ ரெயில் பயணிகளின் வசதிகாக நெரிசல்மிகு நேரங்களில் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் சேவை இன்று (11.08.2023) மட்டும் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, மெட்ரோ ரெயில் பயணிகள் நீட்டிக்கப்பட்ட நெரிசல்மிகு நேரங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரெயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட மெட்ரோ ரெயில் நீட்டிப்பு சேவைகள் இன்று (11.08.2023)மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story