ரோப்கார் நடுவழியில் நின்று விட்டால் மீட்பது குறித்து ஒத்திகை
ேசாளிங்கர் லட்சுமி நரசிம்மர் பெரியமலையில் ரோப்கார் நடுவழியில் நின்று விட்டால் பக்தர்களை மீட்பது குறித்து ஒத்திகை நடந்தது,
1,305 படிக்கட்டுகள்
பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் சோளிங்கர் யோக நரசிம்ம சுவாமி கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலானது 750 அடி உயரமுள்ள ஒரே குன்றாலான மலையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் 1,305 படிக்கட்டுகள் ஏறி சென்று வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் சோளிங்கர் மலைக்கோவிலுக்கு ரோப்கார் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பணிகள் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது நிறைவு பகுதியை அடைந்துள்ளது.
மீட்பு ஒத்திகை
செங்குத்தான இந்த மலைப்பாதைக்கு ரோப்கார் செல்லும்போது ஏதேனும் நடுவழியில் நின்று விபத்து ஏற்பட்டால் அதில் உள்ள பக்தர்களை எப்படி பாதுகாப்பதற்காக மீட்பது குறித்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இணைந்து மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ரோப்காரில் இருந்து பக்தர்களை பத்திரமாக மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து ஒத்திகைகள் நடைபெற்றது. மேலும் விபத்துகள் ஏற்பட்டால் மீட்புக்கு தேவையான உபகரணங்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கோவில் நிர்வாகத்திற்கு அறிவுரைகளை வழங்கினர்.
தேசிய பேரிடர் மீட்புக்குறித்து டெபிட் கமாண்டர் கபில் தலைமையில் கமாண்டர் படையினர் தத்ரூபமாக செய்து காட்டினர்.
இதில் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஜெகநாதன், தீயணைப்புத் துறையினர், ஆணையர் ரமணி, செயல் அலுவலர் ஜெயா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.