சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை..!


சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை..!
x

சென்னையில் குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.

சென்னை,

குடியரசு தின விழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) அன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெறும்.

தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணி நடைபெறுவதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், குடியரசு தினவிழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரை சாலையில் அணிவகுப்பு ஒத்திகை இன்று நடைபெற்று வருகிறது. முப்படை வீரர்கள், தேசிய மாணவர் படை, மத்திய தொழிற் பாதுகாப்பு படை, காவல், தீயணைப்புத்துறையினர் ஒத்திகையில் கலந்து கொண்டுள்ளனர். வாத்தியங்கள் இசைப்போரும் பங்கேற்றனர். அலங்கார ஊர்திகளும் கலந்துகொண்டன. அணிவகுப்பு ஒத்திகை காரணமாக இந்த சாலையில் இன்று முதல் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

1 More update

Next Story