சிறுவன் இறந்த வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி உறவினர்கள் மறியல்
வயல் வெளியில் மர்மமாக இறந்த சிறுவனின் உறவினர்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது,
நெமிலி
வயல் வெளியில் மர்மமாக இறந்த சிறுவனின் உறவினர்கள் வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது,.
சிறுவன் மர்மச்சாவு
நெமிலி அடுத்த கீழ்வெண்பாக்கம் கிராமத்தை ேசர்ந்தவர் காளிதாசன். விவசாய கூலிதொழிலாளி. இவரின் மகன் அவிநாஷ் (வயது 4) கடந்த செவ்வாய்கிழமை அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நெமிலி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மறியல்
இந்த வழக்கில் விரைவாக விசாரிக்குமாறு கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த சிறுவனின் உறவினர்கள், பொதுமக்கள் நெமிலி - ஒச்சேரி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். அப்போது திடீரென ஒருவர் உடலின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார். போலீசார் அவரை தடுத்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளிதங்ததை தொடர்ந்து சமரசம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.