பெண் சாவில் மர்மம் இருப்பதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்-மேட்டூரில் பரபரப்பு


பெண் சாவில் மர்மம் இருப்பதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலை மறியல்-மேட்டூரில் பரபரப்பு
x

மேட்டூரில் பெண் சாவில் மர்மம் இருப்பதாக உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சேலம்

மேட்டூர்:

இளம்பெண் தற்கொலை

சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த சோரகை பகுதியை சேர்ந்த பழனி என்பவருக்கும், எடப்பாடியை சேர்ந்த சந்தியா என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. 3 மாத கர்ப்பமாக இருந்த சந்தியா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் விரைந்து சென்று சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆவதால் மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம் விசாரணைக்கு பரிந்துரை செய்தனர்.

சாலைமறியல்

இந்தநிலையில் நேற்று உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த சந்தியாவின் உறவினர்கள், சந்தியா சாவில் மர்மம் இருப்பதாக கூறி மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த மேட்டூர் உதவி கலெக்டர் தணிகாசலம், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணி, ஆனந்தராஜ் மற்றும் போலீசார் சந்தியா உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story