தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை : இலங்கை திரிகோணமலை கோர்ட்டு உத்தரவு


தமிழக மீனவர்கள் 9 பேர் விடுதலை : இலங்கை திரிகோணமலை கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 26 Aug 2022 4:30 PM IST (Updated: 26 Aug 2022 4:41 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமான மூலம் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

நாகை,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவித பயனும் இல்லை.

இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து கடந்த 10ஆம் தேதி மீன் பிடிக்கச் சென்ற ஒரு படகையும், அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து திரிகோணமலை சிறையில் அடைத்தனர்.

மீனவர்களின் வழக்கு இன்று திரிகோணமலை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். விடுதலை செய்யப்பட்ட 9 மீனவர்களும் ஓரிரு நாட்களில் விமான மூலம் தாயகம் திரும்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story