தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகள்

ஆரணி அருகே தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகளை தாசில்தார் வழங்கினார்
ஆரணி
ஆரணியை அடுத்த மாமண்டூர் புதிய காலனி பகுதியில் நேற்று திடீரென சூறாவளி காற்று வீசியது.
அப்போது கோமதி - சம்பத் என்பவருடைய ஓலை வீட்டில் விறகு அடுப்பு பற்ற வைத்தபோது சூறாவளி காற்றினால் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமாயின.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் பிரமிளா, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தாசில்தார் ரா.மஞ்சுளா, மண்டல துணை தாசில்தார் பிரியா ஆகியோர் நேரில் சென்று கோமதி, சம்பத் ஆகியோருக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு அரசின் சார்பில் வேட்டி, சேலை, அரிசி, மண்எண்ணெய் போன்ற நிவாரண உதவிகளை வழங்கினர்.
மேலும் நிவாரண உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் அனுப்புவதற்கு பரிந்துரை செய்னர்.
அப்போது முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






