காட்டுயானை தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம்
காட்டுயானை தாக்கி பலியான தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரணம்
பந்தலூர்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் வைத்திரி அருகே சீயம்பன்குதிைய சேர்ந்தவர் பாஸ்கரன்(வயது 50). கூலி தொழிலாளி. நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா அம்பலமூலா அருகே அயினிபுறா ஆதிவாசி காலனியில் உள்ள தனது தங்கை வீட்டில் தங்கியிருந்து, கூலி வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் பாஸ்கரன் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அந்த பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றபோது, காட்டுயானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை உதவி வனபாதுகாவலர் கருப்புசாமி வழங்கினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், செல்வராஜ், வனச்சரகர்கள் ரவி, ராதாகிருஷ்ணன், சஞ்சீவி, வீரமணி, யுவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சம்பவம் குறித்து அம்பலமூலா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.