பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள்


பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள்
x
தினத்தந்தி 19 July 2022 11:09 PM IST (Updated: 19 July 2022 11:12 PM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தில் குடிசை வீடு நாசம், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண பொருட்கள் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டம், திருவெண்காடு அருகே திருநகரி பவுண்டு அடி தெருவில் வசித்து வருபவர் சதாசிவம். சம்பவத்தன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இவரது குடிசை வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சதாசிவத்திற்கு நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகை வழங்கினார். அப்போது அவருடன் ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஒன்றிய தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் தினகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


1 More update

Next Story