தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம்
குத்தாலம் அருகே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணத்தை நிவேதா முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
குத்தாலம்:
குத்தாலம் ஒன்றியம் ,கங்காதரபுரம் ஊராட்சி கொண்டங்கி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 73). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவரது கூரை வீட்டில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த அனைத்து உபயோக பொருட்களும் எரிந்து நாசமானது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூம்புகார் எம்.எல்.ஏ. நிவேதா எம்.முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார். இதே போல வருவாய்துறை சார்பில் குத்தாலம் தாசில்தார் இந்துமதி அரிசி,வேஷ்டி,புடவை உள்ளிட்டவற்றை வழங்கினார். இதில் குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன்,தி.மு.க. குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ராஜா, ஒன்றிய துணை செயலாளர் கங்கை முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதிகா பாஸ்கரன், சசிகலா திருமுருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், சிவஞானசுந்தரி பாலு,வருவாய் ஆய்வாளர் சர்மிளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ராஜபிரபு, தி.மு.க. நிர்வாகிகள் பிரபாகரன்,மில்லர், ராகவன், கல்யாணம் உள்ளிட்ட பலர் இருந்தனர்.