குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து காட்டியவர் - உதயநிதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து


குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்து காட்டியவர் - உதயநிதிக்கு கமல்ஹாசன் வாழ்த்து
x
தினத்தந்தி 27 Nov 2023 3:51 PM IST (Updated: 27 Nov 2023 4:02 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், 'தான் எடுத்துக்கொண்ட பொறுப்புகளில் குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்து காட்டியவர் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின்.

தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றி வரும் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.


Next Story