12 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


12 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x
தினத்தந்தி 20 Aug 2023 3:15 AM IST (Updated: 20 Aug 2023 3:15 AM IST)
t-max-icont-min-icon

12 ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் கோடை முதல் சீசன், 2-வது சீசன், வார விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே நடைபாதையில் வியாபாரிகளின் ஆக்கிரமிப்பால் பஸ் நிலையம், தாவரவியல் பூங்கா, மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தாவரவியல் பூங்கா உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊட்டி தாவரவியல் பூங்கா டோங்கா சாலையில் உள்ள 12 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி ஆணையாளர் ஏகராஜ் உத்தரவின்பேரில் நகரமைப்பு அதிகாரிகள் ரவி, மீனாட்சி மற்றும் ஊழியர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.

அப்போது கடைக்காரர்கள் நகராட்சி ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் கடைக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

மேலும் நடைபாதையை மீண்டும் ஆக்கிரமித்து கடை வைத்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.


Next Story