எண்ணூர் கடற்கரை சாலையில் கொட்டிய 356 டன் கட்டிட கழிவுகள் அகற்றம்


எண்ணூர் கடற்கரை சாலையில் கொட்டிய 356 டன் கட்டிட கழிவுகள் அகற்றம்
x

எண்ணூர் கடற்கரை சாலையோரம் கொட்டப்பட்ட 356 டன் கட்டிட கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

திருவள்ளூர்

ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையை ஒட்டியுள்ள கடற்கரையோரம் கட்டிட கழிவுகளை சிலர் கொட்டிச் செல்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் மாசடையும் என பொது நல ஆர்வலர் சுரேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, கட்டிட மற்றும் மணல் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டார்.

கழிவுகள் அகற்றம்

இதையடுத்து சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் நவேந்திரன், செயற்பொறியாளர் தணிகை வேல், உதவி பொறியாளர் அமல்ராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைமையில் 5 லாரிகள், 2 ஜே.சி.பி. வாகனங்களை பயன்படுத்தி, கழிவுகளை அகற்றும் பணி நேற்று நடந்தது.

மொத்தம் 57 லாரிகளில் 356 டன் கழிவுகள் அகற்றப்பட்டு, பள்ளமாக இருந்த புதிய பஸ் நிலையம் பின்புறம் கொட்டப்பட்டது. இதன் மூலம் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கொட்டியிருந்த கழிவுகள் முழுவதுமாக அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story