தஞ்சையில் 50 டன் தேங்காய் மட்டைகள் அகற்றம்


தஞ்சையில் 50 டன் தேங்காய் மட்டைகள் அகற்றம்
x

டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கையாக தஞ்சையில் 50 டன் தேங்காய் மட்டைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

டெங்கு கொசு ஒழிப்பு தடுப்பு நடவடிக்கையாக தஞ்சையில் 50 டன் தேங்காய் மட்டைகள் அகற்றப்பட்டன. மாநகராட்சி அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

டெங்கு தடுப்பு களப்பணி

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட கல்லுக்குளம் அருளானந்த நகர் 3-வது தெரு பகுதியில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் அறிவுறுத்தலின்படி டெங்கு தடுப்பு கள பணிகள் நேற்று நடைபெற்றது. மாநகர்நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி தலைமையிலான குழுவினர் டெங்கு தடுப்பு பணிகளை மேற்கொண்டனர்.இந்த களபணியின் போது அருளானந்த நகர் 3-வது தெருவில் தனியாருக்கு சொந்தமான காலிமனையில் 50டன் தேங்காய் மட்டைகள் குவியலாக சேமித்து வைக்கப்படிருந்தது. டெங்கு பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதற்கு வாய்ப்பாக இந்த தேங்காய் மட்டைகள் இருக்கும் என்பதால் தனியார் காலி மனையின் உரிமையாளருக்கு பொது சுகாதார சட்டத்தின் படி நோட்டீசு வழங்கப்பட்டு பொக்ளின் எந்திரங்கள் கொண்டு 5 லாரிகள் மூலமாக தேங்காய் மட்டைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

அபராதம்

மேலும் அந்த பகுதியில் அமைந்துள்ள தனியார் செவிலியர் கல்லூரி, விடுதிகள் மற்றும் தனியார் தொடக்கப்பள்ளியில் டெங்கு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஏடிஸ் கொசு பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கூட்டு துப்புரவு பணி மேற்கொண்டு பிளாஸ்டிக் கப்கள், தேங்காய் சிரட்டைகள், டயர்கள், உடைந்த பாத்திரங்கள் ஆகியவை கொசுப்புழு உற்பத்தியாகாவண்ணம் அகற்றப்பட்டது. வீடுகள், காலிமனைகள் ஆகியவற்றில் டெங்கு கொசு உற்பத்தியாகும் கலன்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

1 More update

Next Story