639 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றம்


639 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றம்
x

639 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன.

திருச்சி

திருச்சி:

போக்குவரத்து நெரிசல்

ரெயில் இயக்க பாதுகாப்பிற்கு ரெயில்வே துறை முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதில் ரெயில் பயணிகளின் பாதுகாப்பு மட்டுமின்றி ரெயில் தண்டவாள பகுதியில் குறுக்கே செல்லும் சாலையில் பயணிக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ரெயில் வழித்தடத்தில் குறுக்கே வரும் சாலை பகுதிகளில் ஏற்படும் வாகன போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரெயில் போக்குவரத்து பாதுகாப்பான இயக்கத்தை எளிதாக்கவும், ரெயில்வே, குடிமை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து சாலையில் மேல் மேம்பாலங்கள், சாலையின் கீழ் சுரங்க பாதைகள் அமைத்து வருகிறது. இதன் மூலம் ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்துவதோடு, ரெயில் போக்குவரத்து பாதுகாப்பும் மேம்படுகிறது.

விபத்துகளை தடுப்பதிலும்...

ரெயில்வே கேட் குறுக்கே உள்ள சாலையில் வரும் வாகனங்கள் அத்துமீறி ரெயில்வே கேட்டை கடப்பதால் ஏற்படும் விபத்துகளை தடுப்பதிலும், சாலை மற்றும் ரெயில் போக்குவரத்தின் சீரான ஓட்டத்தை செயல்படுத்துவதிலும் தென்னக ரெயில்வே கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றப்படுகிறது. தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளில் மொத்தம் 639 ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. 2014-ம் ஆண்டு 262 ரெயில்வே ஊழியர்களால் இயக்கப்பட்ட ரெயில்வே கேட்டுகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் 92 ரெயில்வே கேட் பகுதியில் உள்ள சாலையின் மேற்பகுதியில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் கட்டப்பட்டுள்ளன.


Next Story