குவிந்து இருந்த குப்பைகள் அகற்றம்


குவிந்து இருந்த குப்பைகள் அகற்றம்
x

பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் குவிந்து இருந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

விருதுநகர்

சிவகாசி

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி பஞ்சாயத்தில் நாரணாபுரம் ரோட்டில் சிவன்கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. எவ்வித பயன்பாட்டிலும் இல்லாத நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் அங்கு குப்பைகளையும், அச்சக கழிவுகளையும் கொட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் குப்பை மலையாக காட்சி அளித்தது. சில நேரங்களில் குப்பைக்கு தீ வைத்து விட்டு சென்று விடுவார்கள். இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கும். இதனால் சுற்றுச்சூழல் பாதித்தது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அப்பகுதி மக்கள் பள்ளப்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியனிடம் புகார் தெரிவித்தனர். அந்த பகுதியில் உள்ள குப்பையை அகற்ற கோரி மனு கொடுத்தனர். அதனை தொடர்ந்து சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற பஞ்சாயத்து நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தற்போது 20 ஏக்கர் பரப்பில் உள்ள குப்பைகள் மணல் அள்ளும் எந்திரம் மூலம் அகற்றப்படுகிறது. இதனை பஞ்சாயத்து தலைவர் ராஜபாண்டியன், பஞ்சாயத்து செயலர் லட்சுமண பெருமாள் ஆகியோர் பார்வையிட்டு உரிய ஆலோசனை வழங்கினர். குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுத்த பஞ்சாயத்து நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story