வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 18 July 2023 6:45 PM GMT (Updated: 18 July 2023 6:45 PM GMT)

சின்னசேலம் அருகே வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அருகே வி.கிருஷ்ணாபுரம் கிராம எல்லை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பாசன வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இதனால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு வாய்க்கால் மூலம் முறையாக தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாய்க்கால் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்தனர். இந்த நிலையில் நேற்று பொதுப்பணித்துறை பாசன பிரிவு உதவி பொறியாளர் பிரபு, வருவாய் ஆய்வாளர் செந்தில், நில அளவையர் மணிவேல், கிராம நிர்வாக அலுவலர் செல்லமுத்து மற்றும் அதிகாரிகள் வி.கிருஷ்ணாபுரம் கிராம எல்லை பகுதியில் உள்ள வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரங்களை கொண்டு அகற்றினர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கீழ்குப்பம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story