திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்பொதுமக்கள் போராட்டம்


திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Aug 2023 9:19 AM IST (Updated: 23 Aug 2023 9:20 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது. அப்போது பொதுமக்கள் வீட்டு சுவற்றின் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் அங்கு பதட்டம் நிலவியது.

திருவள்ளூர்

திருவள்ளூர்,

திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டு வரதராஜ நகர் பகுதிக்கு செல்ல கற்குழாய் தெரு உள்ளது. இந்த கற்குழாய் தெருவில் தார் சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து அனுமதியின்றி கடைகள், வீடுகளை கட்டினர். இந்நிலையில் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பதற்காக திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்றுவதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உத்தரவின்பேரில் நகரமைப்பு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரங்களுடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கட்டிடங்களை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

அப்போது ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் போது வீட்டின் உரிமையாளர்கள் வீட்டின் சுவற்றின் மேல் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இதைதொடர்ந்து நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் படுத்தினர். பின்னர் சுவரின் மீது ஏரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கீழே இறங்கி வந்தனர். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்றது. இந்நிலையில் அப்பகுதி மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையான தார் சாலை அமைக்கும் பணி இன்னும் சில நாட்களில் நடைபெறும் என நகராட்சி ஆணையர் தெரிவித்தார்.


Next Story