பூக்கடை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்


பூக்கடை பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
x

பூக்கடை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பூக்கடைபோலீஸ் நிலையத்திலிருந்து குறளகம் சந்திப்பு வரை சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.

சென்னை

சென்னை பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டுள்ள கடைகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அகற்றியதுடன், நடைபாதையில் தடுப்பு அமைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 3 மாதங்களாக மீண்டும் நடைபாைதயை ஆக்கிரமித்து கடை நடத்தினர். இதனை பலமுறை அகற்ற வலியுறுத்தியும் வியாபாரிகள் தொடர்ந்து கடை நடத்தி வந்ததால் சென்னை மாநகராட்சி ராயபுரம் 5-வது மண்டலம் 59-வது வார்டு உதவி பொறியாளர் கார்த்திக் தலைமையில் மண்டல பகுதி செயற்பொறியாளர் சொக்கலிங்கம் மேற்பார்வையில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூக்கடை போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து பூக்கடைபோலீஸ் நிலையத்திலிருந்து குறளகம் சந்திப்பு வரை சாலையை ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர்.


Next Story