ஆக்கிரமிப்பு குடிசை அகற்றம்


ஆக்கிரமிப்பு குடிசை அகற்றம்
x
தினத்தந்தி 20 Jun 2023 4:51 PM GMT (Updated: 21 Jun 2023 7:20 AM GMT)

பேரணாம்பட்டு அருகே ஆக்கிரமிப்பு குடிசை அகற்றப்பட்டது.

வேலூர்

பேரணாம்பட்டு

பேரணாம்பட்டு அருகே மொரசப்பல்லி ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வழக்கறிஞர் ராகவலு.

இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் மூதாட்டி மங்கம்மாள் (வயது 80) மற்றும் அவரது மகள் குப்பம்மாள் (50) ஆகியோர் ஆக்கிரமித்து குடிசை வீ்டு கட்டி வசித்து வந்ததாக, வழக்கறிஞர் ராகவலு 10 ஆண்டுகளுக்கு முன்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்ற வந்த போது மங்கம்மாள், குப்பம்மாள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுப்பட்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து வழக்கறிஞர் ராகவலு மீண்டும் கோர்ட்டில் முறையிட்டு குடிசையை இடிப்பதற்கான உத்தரவை பெற்றார்.

அதன்பேரில் இன்று பேரணாம்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காமராஜ், மற்றும் பெண் போலீசார் பாதுகாப்புடன், கிராமநிர்வாக அலுவலர் முத்துமாரி முன்னிலையில், பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்க முயன்றபோது மீண்டும் மங்கம்மாள், அவரது மகள் குப்பம்மாள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு பேரணாம்பட்டு - குடியாத்தம் சாலையில் மறியல் செய்ய முயன்றனர்.

போலீசார் எச்சரிக்கை செய்து கோர்ட்டு உத்தரவு வந்துள்ளதை விளக்கினர்.

இதன் பின்னர் பாத்திரங்களை அப்புறப்படுத்திவிட்டு குடிசை வீடு அகற்றப்பட்டது.


Related Tags :
Next Story