புரசைவாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - வாகன ஓட்டிகள் நிம்மதி


புரசைவாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - வாகன ஓட்டிகள் நிம்மதி
x

சென்னை புரசைவாக்கம் தானா தெருவில் கடைகள் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை இருந்து வந்தது.

சென்னை

சென்னை:

சென்னை புரசைவாக்கம் தானா தெரு கடைகள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். இந்த சாலையை பழக்கடைகள், பூக்கடைகள் ஆக்கிரமித்திருந்தன. இதனால் இந்த சாலை குறுகி போனதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் திண்டாடும் நிலை இருந்து வந்தது.

கடைகள் வைத்திருக்கும் உரிமையாளர்களும் ஆக்கிரமிப்பு கடைகளால் சிரமம் அடைந்து வந்தனர். இந்த நிலையில் புரசைவாக்கம் தானா தெருவில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை சென்னை மாநகராட்சி ஊழியர்களும், வேப்பேரி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் தலைமையில் போக்குவரத்து போலீசாரும் அகற்றினர்.

இதையடுத்து சாலை மீண்டும் விசாலமானதால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


Next Story