ஆரணி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


ஆரணி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

ஆரணி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய நிலையில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.

திருவண்ணாமலை
  1. ஆரணி பஸ் நிலையங்களில் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிய நிலையில் மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆரணி நகரில் 2 பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு கூட இடமில்லாமல் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள், சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரம் செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தினத்தந்தி'யில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் கே.பி.குமரன் ஆரணி நகராட்சி சார்பில் பழைய, புதிய பஸ் நிலையங்களில் உள்ள அனைத்து கடைக்காரர்களுக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற அறிவிப்பு நோட்டீசினை வழங்கினர்.

இதனை தொடர்ந்து அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை நேற்று காலை நகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ஆண்டனி மற்றும் தூய்மை பணியாளர்கள், களப்பணியாளருடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று 2 பஸ் நிலையங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். இதனால் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

சிறிது நேரத்திலேயே கடைக்காரர்கள் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வியாபாரத்தை தொடங்கினர். இதனால் ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story