இளையான்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


இளையான்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 22 Jun 2023 6:45 PM GMT (Updated: 23 Jun 2023 9:02 AM GMT)

இளையான்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடியில் பொது போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக இளையான்குடியில் சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையினர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பாராபட்சம் காண்பிப்பதாக பொதுமக்களும், வியாபாரிகளும் குற்றம் சாட்டினார்கள்.

சரியான அளவீடுகளுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இளையான்குடி தாசில்தார் கோபிநாத் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் செய்யது இப்ராஹிம்ஷா, உதவி பொறியாளர் முருகானந்தம், சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், செல்வி, இளையான்குடி ேபாலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் செயின் தலைமையிலான போலீசார் முன்னிலையில் இளையான்குடி பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.


Next Story