நெல்லை டவுனில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நெல்லை டவுனில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

நெல்லை டவுனில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டன.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலை சுற்றிலும் 4 ரத வீதிகள் அமைந்துள்ளது. இந்த ரதவீதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி தேரோட்டத்தின்போது நெல்லையப்பர் தேர் உள்பட 5 தேர்கள் வலம் வரும். இதுதவிர ஒவ்வொரு மாதத்திலும் விழாக்களின்போது சப்பரங்கள் வீதிஉலா வரும்.

சமீபத்தில் நடந்த ஆனி தேரோட்டத்தின்போது வாகையடிமுனை பகுதியில் தேர் திரும்புவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் தெற்கு ரதவீதியில் வாகையடி முனையில் இருந்து சந்திபிள்ளையார் முக்கு வரையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி நேற்று நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தெற்கு ரதவீதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள், கடை கூரைகள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

மேலும் நெல்லை டவுன் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் 36 கடைகளில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 18 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டது.


Next Story