2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்


2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

விழுப்புரம் மருதூர் ஏரியில் 2-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் வி.மருதூர் ஏரியின் பெரும் பகுதியையும் மற்றும் ஏரிக்கரை பகுதியையும் 390 பேர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், கடைகள் என கட்டிடங்களை கட்டியுள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளால் ஏரியின் நீர்பிடிப்பு பகுதி நாளுக்கு நாள் சுருங்கி வருவதோடு ஏரிக்கு நீர்வரத்து வருவதும் தடைபட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு நேரில் சென்று ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை தொடங்கினர். முதல்நாளில் 10 வீடுகள், ஒரு மினி குடிநீர் தொட்டி, 2 மீன் பண்ணைகள், 2 சிறிய கோவில்கள் ஆகியவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ஆனந்தகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். விழுப்புரம் மணிநகர் பகுதியில் இருந்த 2 ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டதோடு காலிமனையில் வேலி அமைத்து பயிர் செய்திருந்த வாழை மரங்களும் அகற்றப்பட்டன. தொடர்ந்து, தினந்தோறும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறும், எனவே ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story