கோவில் இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


கோவில் இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கோவில் இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே கே.வி.கோட்டை ஊராட்சியில் உருமநாதபுரம் கிராமத்தில் பன்னிக்கோட்டை முனீஸ்வரர், கருப்பர், ராக்கம்மாள் ஆகிய கோவில்கள் உள்ளன. இக்கோவிலுக்கு ெசாந்தமான 19 ஏக்கர் இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதையடுத்து இந்த கோவிலில் வழிபடும் நபர்கள் இந்த இ்டங்களில் ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலங்களை மீட்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதன்படி மாவட்ட கலெக்டர், ஆலங்குடி தாசில்தாருக்கு கோவிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றுமாறு உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆக்கிரமிப்பு சிலவற்றை அகற்றப்பட்டது. இதைதொடர்ந்து நேற்று தாசில்தார் விஸ்வநாதன் தலைமையில், வருவாய்த்துறையினர் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கொட்டகை மற்றும் தண்ணீர் தொட்டிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர். அப்போது துணை தாசில்தார் ராஜேந்திரன், ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணு, சர்வேயர் கோபி, கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்்தனர்.


Next Story