பாலை தனியாருக்கு விற்ற கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்


பாலை தனியாருக்கு விற்ற கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
x

பாலை தனியாருக்கு விற்ற கூட்டுறவு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

திருச்சி

தா.பேட்டை அருகே ஜடமங்கலம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளராக ரமேஷ் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கூட்டுறவு சங்கம் மூலம் பெறப்பட்ட பாலை ஒன்றியத்திற்கு அனுப்பாமல் சங்க துணை விதிகளுக்கு முரணாக தனியார் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளார். மேலும்அவர் பணம் கையாடல் செய்துள்ளதும் ஆய்வின் போது தெரியவந்தது. இதனையடுத்து சங்க செயலாளர் ரமேஷை தற்காலிக பணிநீக்கம் செய்து துணைபதிவாளர் ஜெயபாலன் உத்தரவிட்டுள்ளார். சங்க பால் பரிசோதகர் செல்வம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர் பொறுப்பை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.


Next Story