சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி


சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அாிமா சங்கத்தினர் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சின்னசேலத்தில் சாலை ஆக்கிரமிப்பு காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வந்தது. இதனால் சாலையோர ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்தது. இதையடுத்து சின்னசேலம் தாசில்தார் இந்திரா, பேரூராட்சி செயல் அலுவலர் உஷா ஆகியோர் சின்னசேலம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றப்போவதாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு நோட்டீஸ் வெளியிட்டினர். அதன்படி கடந்த 28-ந் தேதி சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சின்னசேலம் பேரூராட்சி பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அம்சாகுளம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சின்னசேலம் பஸ் நிலையம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றினர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறாமல் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 2-வது நாளாக நேற்று புதிய பஸ் நிலையத்திலிருந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கப்பட்டது.

அதிகாரிகளை முற்றுகை

அப்போது அரிமா சங்கத்தின் மூலம் அமைக்கப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடையை தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கினர். இதையறிந்த அாிமா சங்க நிா்வாகிகள் அங்கு திரண்டு அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது.


Next Story