விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்


விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றம்
x

கரூர் சுங்ககேட் பகுதியில் விநாயகர் சிலை குடோனுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு மீண்டும் விற்பனை தொடங்கியது.

கரூர்

குடோனுக்கு சீல்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகளை வடிவமைத்து குடோனில் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரசாயன பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் வந்தது. அதன்பேரில், மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு சென்று விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்ட குடோனை பூட்டி சீல் வைத்தனர்.

சீல் அகற்றம்

இதையடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விநாயகர் சிலை விற்பனை செய்வது குறித்து சில நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று கரூர் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைக்கப்பட்ட விநாயகர் சிலை குடோனுக்கு சென்று அந்த சீலை அகற்றினர். இதையடுத்து மீண்டும் அங்கு விநாயகர் சிலை விற்பனை தொடங்கியது. அப்போது விநாயகர் சிலை வாங்க வந்த வாடிக்கையாளர்களிடம் ஆறு மற்றும் நீர்நிலைகளில் சிலைகளை கரைக்கக் கூடாது உள்ளிட்ட அரசு அறிவித்துள்ள பல்வேறு நிபந்தனைகளை எடுத்துரைத்து விற்பனை நடந்தது.


Next Story