சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை


சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை
x

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனே அகற்ற வேண்டும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் உரிய அனுமதி பெறாமல் அமைக்கப்படும் விளம்பரப் பலகைகள்-பதாகைகளை அகற்ற பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு கடந்த 17-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வை மேற்கொண்டது. அப்போது உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 23 விளம்பரப் பலகைகள் மற்றும் 70 விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டன. மேலும் சென்னையில் உரிய அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள்-பதாகைகளை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக அகற்றிட வேண்டும். மீறும் பட்சத்தில் மாநகராட்சி சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story