பழைய சாலையை அகற்றும் பணி


பழைய சாலையை அகற்றும் பணி
x

நவீன எந்திரத்தின் மூலமாக பழைய சாலையை அகற்றும் பணி

திருப்பூர்

தளி,

உடுமலையில் எந்திரத்தின் மூலம் பழைய சாலை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

பழைய சாலை

அடிப்படை தேவைகளில் முதன்மையானதாக உள்ளது சாலை வசதி. ஊரக, மாவட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் என அந்தந்த பகுதிக்கு தகுந்தவாறு தார் அல்லது கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டு அதன் மூலமாக பொதுமக்கள் பயன் அடைந்து வருகின்றனர். அவற்றில் ஏற்படும் பழுதுகளை சீரமைத்தல், பழையதை அகற்றி புதிதாக சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறது. இதனால் சாலை வழி போக்குவரத்து பொதுமக்களுக்கு பெரிதும் உதவி வருகிறது.

அந்த வகையில் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்திற்கு ஏதுவாக பிரதான மற்றும் இணை சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளது.அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீக்கி புதிதாக சாலை அமைக்கும் பணிகளும் அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 24-வது வார்டு உட்பட்ட பகுதியில் முதன் முதலாக எந்திரத்தின் மூலம் பழைய சாலையை தோண்டி அகற்றும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

சீரமைப்பு

அதன் மூலம் மூன்று சென்டி மீட்டர் ஆழத்திற்கு சேதம் அடைந்த சாலை அகற்றப்பட்டு வருகிறது. அப்போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தார் சாலை கழிவுகள் மற்றொரு வாகனத்தின் மூலமாக சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதிதாக சாலை அமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. எந்திரத்தின் வரவால் சாலை பணிகள் விரைந்து படிப்பதற்கான சூழல் ஏற்பட்டு உள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.



Next Story