சீரமைக்கப்பட்ட ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி
சீரமைக்கப்பட்ட ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியை கலெக்டர் திறந்துவைத்தார்.
கே.வி.குப்பம், ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி கட்டிடம் எல் அண்டு டி சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து சீரமைக்கப்பட்டு, ஸ்மார்ட் வகுப்பு, கழிப்பறைகள் ஆகியவற்றிற்கான பணிகள் முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நடைபெற்றது. குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் எம்.வெங்கட்ராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் என்.ராமச்சந்திரன், எல் அண்டு டி செயல் அதிகாரி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பானுமதி வரவேற்றார்.
வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ரிப்பன் வெட்டி பள்ளியை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். கே.வி.குப்பம் தாசில்தார் அ.கீதா, ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் ஜி.சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் பெ.மனோகரன், கல்வி அலுவலர் ராபர்ட் இளவரசன், ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயலட்சுமி முருகன், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பலதா சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் முரளிராஜன் நன்றி கூறினார்.