பாரம்பரிய பங்களா ரூ.10¼ கோடியில் சீரமைப்பு


பாரம்பரிய பங்களா ரூ.10¼ கோடியில் சீரமைப்பு
x

கோவை ரெயின்போ காலனியில் உள்ள பாரம்பரிய பங்களா வை ரூ.10¼ கோடியில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்


கோவை ரெயின்போ காலனியில் உள்ள பாரம்பரிய பங்களா வை ரூ.10¼ கோடியில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. அதை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பாரம்பரிய பங்களா

கோவை -திருச்சி ரோடு ரெயின்போ காலனியில் நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் உள்ளது. இதன் பின்புறத்தில் வெள்ளை நிறத் தில் 2 மாடி கொண்ட ஒரு பங்களா உள்ளது. இதை ஹெரிட் டேஜ் பங்களா (பாரம்பரிய பங்களா) என்று கூறுவது உண்டு.

இது, கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பும் இன்றி காணப்பட்டது. ஆனால் அங்கு சில சமூக விரோத செயல்கள் நடப்பதாக புகார் எழுந்தது.

மேலும் அங்குள்ள மேற்கூரைகள் சேதமடைந்து பங்களா இடியும் நிலை ஏற்பட்டது. எனவே இந்த பங்களாவை பாரம்பரியம் மாறாமல் சீரமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

ரூ.10¼ கோடியில் சீரமைப்பு

அதன்படி இந்த பங்களாவை சீரமைக்க ரூ.10 கோடியே 25 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பங்களாவை பழமை மாறாமல் சீரமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.

இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சூலூரை சேர்ந்த ஜமீன் காலத்தில் 1853-ம் ஆண்டு தரைத்தளம், முதல் தளத்துடன் மொத்தம் 8 அறைகளுடன் பங்களா கட்டப் பட்டு உள்ளது. இங்கு ஆங்கிலேயர் காலத்தில் கவர்னர்கள் தங்கியதால் கவர்னர் மாளிகை என்றும் அழைப்பது உண்டு.

சுதந்திரத்திற்கு பிறகு அந்த பங்களாவில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டன. கடைசியாக கடந்த 15 ஆண்டுக ளுக்கு முன்பு வனத்துறை அலுவலகம் செயல்பட்டது.

அருங்காட்சியகம்

அதன்பிறகு போதிய பராமரிப்பு இல்லாததால் பங்களா சிதிலம டைந்தது. முதல் தளத்தில் மேற்கூரையில் 50 சதவீதம் சேதமடைந் தது. இதைத்தொடர்ந்து தற்போது நிதி ஒதுக்கப்பட்டு பங்களாவின் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி போன்ற வை மூலம் சுவர் பராமரிக்கப்பட்டு வருகிறது.

உடைந்த மரக்கட் டைகள் அகற்றப்பட்டு அதுபோன்றே மரக்கட் டைகள் வைத்து சரி செய்யப்பட்டு வருகிறது. பங்களா சீரமைக் கப்பட்டதும் அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அங்கு என்னென்ன பழங்கால பொருட் கள் வைப்பது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story