தொளார் சமத்துவபுரம் குடியிருப்பில் சீரமைப்பு பணி


தொளார் சமத்துவபுரம் குடியிருப்பில் சீரமைப்பு பணி
x

திட்டக்குடி அருகே உள்ள தொளார் சமத்துவபுரம் குடியிருப்பில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்

கடலூர்

ராமநத்தம்

கலெக்டர் ஆய்வு

திட்டக்குடி அருகே தொளாரில் உள்ள சமத்துவபுரம் குடியிருப்பில் சேதமடைந்து காணப்பட்ட 78 வீடுகள் சீரமைப்பு மற்றும் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணியை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வுசெய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தொளார் சமத்துவபுரம் குடியிருப்பில் வீடுகள் கேட்டு மொத்தம் 534 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 252 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தகுதியான பயனாளிகளை பரிசீலனை செய்து வருவதாகவும், இவர்களுக்கு இன்னும் 4 மாதங்களில் வீடுகள் வழங்கப்பட உள்ளன. மொத்தம் 78 வீடுகள் மட்டுமே உள்ள நிலையில் கூடுதலாக 22 வீடுகள் கட்டுவதற்கு பரிசீலித்து 100 பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.

விழிப்புணர்வு கூட்டம்

தொடர்ந்து வேப்பூர் தனியார் மண்டபத்தில் நல்லூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்ட விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது‌. இதில் கலெக்டர் பாலசுப்பரமணியம் கலந்து கொண்டு பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்(ஊரகவளர்ச்சி முகமை) பவன்குமார் கிரியப்பனவர், நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், ஜெயக்குமாரி, மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சிவகுருநாதன், பொறியாளர்கள் ராஜேந்திரன், சாந்தி மற்றும் மங்களூர் ஒன்றிய, நல்லூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story