ரூ.27¼ லட்சம் மனைவாடகை பாக்கி


ரூ.27¼ லட்சம் மனைவாடகை பாக்கி
x

ரூ.27¼ லட்சம் மனைவாடகை பாக்கியை செலுத்த கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சொந்தமான காலிமனைகளை பலர் வாடகை செலுத்தி பயன்படுத்தி வருகின்றனர். மனையை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் வாடகை செலுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பலர் வாடகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக 21 பேர் வாடகை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின்றனர். கோவிலுக்கு ரூ.27 லட்சத்து 25 ஆயிரத்து 469 பாக்கி நிலுவையில் இருந்து வருகிறது. எனவே சம்பந்தப் பட்டவர்களிடம் வாடகை செலுத்துமாறு கோவில் நிர்வாகம் வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் மனை வாடகை கட்டாதவர்களின் பெயர் மற்றும் ஒவ்வொருவரும் வாடகை செலுத்த வேண்டிய பாக்கி விவரம் குறித்து பட்டியலிட்டு பெரிய அளவில் தகவல் பலகையை கோவில் நிர்வாகம் கோவில் வாசல் முன்பு வைத்துள்ளது. இந்துசமய அறநிலையத்துறை சட்டத்தின்படி வெளியேற்றப்படுவார்கள் என எச்சரிக்கப்படுகிறது என்ற வாசகமும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


Next Story